பயங்கரவாதிகளுக்கு நிதி வழக்குவதை தடுக்கும் சட்டமூலத்தை கொண்டு வரும் முன்னர் விடுதலைப்புலிகளிடம் இருந்து அரசாங்கம் கைப்பற்றிய கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்கம் தொடர்பான தகவல்களை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவதை தடுக்கும் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக கருது வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
போருக்கு பின்னர் அரசாங்கம் கைப்பற்றிய விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான பணம் மற்றும் தங்கம் தொடர்பில் எவ்விதமான குறிப்புகளும் இல்லை. கே.பியிடம் இருப்பதாக கூறப்பட்ட கோடிக்கணக்கான பணம் தொடர்பாகவும் எதனையும் அரசாங்கம் வெளியிடவில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக