இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்திஷூடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் குறித்து தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி எழுப்பிய கேள்விகளுக்கு சோனியா இவ்வாறு பதிலளித்துள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்நோக்கி வருவதாக கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் பிரமர் மன் மோகன் சிங்கிற்கும், கட்சித் தலைவி சோனியா காந்திக்கும் கருணாநிதி கடிதம் அனுப்பி வைத்திருந்தார். இந்தக் கடிதம் தொடர்பில் சோனியா காந்தி பதில் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இதேவேளை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கருணாநிதி தெரிவித்துள்ளார்.இந்த விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பதி மற்றும் பௌத்த கயா ஆகியவற்றை வழிபாடு செய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக