ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

ஐ.நா மனித உரிமைப் பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஜீ.ரீ.எப் நிகழ்வில் கலந்து கொள்வர்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளினது பிரதிநிதிகள், க்ளோபல் தமிழ் போராம் ஒழுங்கு செய்யும் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைப் பேரவை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஜீ.ரீ.எப் நிகழ்வில் கலந்து கொள்வர்?குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வாக்களிக்கும் உரிமையுடைய நாடுகளே இவ்வாறு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளன

பிரித்தானிய பாராளுமன்றில் இந்த மாதம் 27ம் திகதி இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் உறுப்பினர் யஸ்மீன் சூகா, இலங்கைக்கான நோர்வேயின் விசேட சமாதானப் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, சனல்4 ஊடகத்தினால் தயாரிக்கப்பட்ட மற்றுமொரு இலங்கை தொடர்பான விவரணமொன்று இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக