ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

ஐதேக ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு புரட்சிகரமான தீர்வு உறுதி - யாழில் ரணில்

ஐதேக ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு புரட்சிகரமான தீர்வு உறுதி - யாழில் ரணில் (படங்கள்)நாம் ஆட்சி அமைத்தால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ள சிபாரிசுகளை அமுல்படுத்துவதுடன் நாம் தமிழ் மக்களுக்கு ஒரு புரட்சிகரமான தீர்வினை வழங்குவோம். மக்களின் இறைமையை மதிக்கின்றவர்கள் எம்முடன் வரலாம் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர் கட்சி எதிர்ப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16) நண்பகல் ஒரு மணியளவில் யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளர்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் இந்த அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளோம். இந்த அரசாங்கம் எங்கள் யோசனைகளை ஏற்று கொண்டு செயல் பாடாமல் விட்டால் மக்களை திரட்டி இந்த அரசை அகற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

நேற்று பலாலி சுற்று வட்டாரத்தில் வாழும் மக்கள் நடாத்திய உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் எதிர் கட்சிகள் எதிர்ப்பு இயக்கம் என்ற ரீதியில் நாம் கலந்து கொண்டோம்.

அங்கே தேவையற்ற ஒரு இடையுறு ஏற்பட்டது. நான் பேச ஆரம்பித்த போது எனது உரையை குழப்பும் நோக்குடன் கூச்சல் எழுப்பட்டது. பின்னர் நாங்கள் அந்த இடத்தைவிட்டு அகன்ற பொழுது மக்கள் மத்தியில் சென்று அவர்களை விரட்டுவதற்கு முயற்சி செய்துள்ளார்கள்.

அதனை செய்தது இராணுவ புலனாய்வாளர்களே. அவர்கள் இல்லையெனில் இராணுவ புலனாய்வாளர்கள் மூலம் விசாரணைகளை மேற்கொண்டு அந்த சம்பவத்தை மேற்கொண்டவர்கள் பற்றி எனக்கு எழுத்து மூல அறிக்கையை இராணுவ தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய சமர்பிக்கட்டும் என தெரிவித்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் புதிய இடது சாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண முஸ்லிம் தமிழ் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக