சனி, 23 பிப்ரவரி, 2013

மாநாட்டில் நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சித் திட்டங்ளை முறியடிக்கத் தயார் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க

News Serviceஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சித் திட்டங்ளை முறியடிக்கத் தயார் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டுக்கு எதிராக எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அதனை வெற்றிகொள்ளத் தயார். நாட்டின் உண்மை நிலைமையை உலக சமூகத்திற்கு எடுத்துரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமை தாங்கவுள்ளார். எதிர்வரும் 25ம் திகதி இலங்கைப் பிரதிநிதிகள் குழு ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளது. எதிர்வரும் 27ம் திகதி இலங்கை நேரப்படி மாலை 4.20 மணியளவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மனித உரிமைப் பேரவை மாநாட்டில் உரையாற்றவுள்ளார். மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு பதிலளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக