தமது நற்பெயருக்கும், இராணுவத்திற்கும் அவதூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி, யாழ் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கு எதிராக 100 கோடி ரூபா இழப்பீடு கோரி, வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வெளியாகும் யாழ் தினக்குரல் பத்திரிகை தீவைக்கப்பட்டமை தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாக யாழ் இராணுவக் கட்டளைத் தளபதி மீது குற்றம் சுமத்தியிருந்தார். இது தவறான குற்றச்சாட்டு என ஹத்துருசிங்க கூறியுள்ளார்.பத்திரிகைகளை தீயிடும் அளவுக்கு இராணுவம் தரம் தாழ்ந்து போய்விடவில்லை எனவும் இது தமிழ் பத்திரிகைகளை விநியோகிப்பவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாகவே ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடக்கில் மக்கள் மத்தியில் இராணுவத்திற்கான ஆதரவு அதிகரித்து வருவதை பொறுத்து கொள்ள முடியாத தமிழ் அரசியல்வாதிகள், இராணுவத்திற்கு எதிராக சேறுப்பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஹத்துருசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக