திங்கள், 25 பிப்ரவரி, 2013

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரின் எச்சரிக்கை – நடுக்கத்தில் அரச உத்தியோகத்தர்கள்

அண்மையில் கிளிநொச்சி முல்லைத் தீவு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது.
அடுத்தநாள் அதனை பிறின்ட் எடுத்து அரச அதிபருக்கு அனுப்பிய தரப்பினர் தாம் உங்களுடன் கதைப்பது எல்லாம் இணையத்தில் வெளிவருகிறது என முறையிட்டுள்ளனர்.
அது குறித்து கோபம் அடைந்த அரச அதிபர் அந்த உரையாடல் இட்பெற்ற போது தனக்கு அருகில் இருந்தவர்கள் யார் என்று எல்லாம் தேடி விசாரித்து எச்சரித்து உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை எச்சரித்த அரச அதிபர் மாவட்ட செயலகத்தில் உள்ள கணனிகளை பயன்படுத்துவோர் தமது சுய மின்னஞ்சல்களை திறக்கக் கூடாது என்றும் அரசாங்கத்திற்கு எதிரான எந்த கருத்துக்களையும் வேறு எவருக்கும் பரிமாறக் கூடாது என்றும் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு உத்தியோகத்தர்கள் செயலக கணனிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.பாதுகாப்பு தரப்பு மட்டங்களில் இருந்தும் கூட செய்திகளை பெற்று வருகிறது. இந்த நிலையில் வெளிவரும் செய்திகள் அல்லது குற்றச்சாட்டுக்களில் உள்ள உண்மையை புரிந்து கொண்டு அதற்கு தீர்வு காண்பதனை விடுத்து தனிப்பட்டவர்கள் மீது சந்தேகம் கொண்டு அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது வெளிப்படையான அரசாங்க செயற்பாடுகளுக்கு முன் உதாரணமாக அமையாது.

குறிப்பாக வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் ஜனநாயகத்தையும் ஊடக சுதந்திரத்தையும் கொண்டு வந்திருப்பதாக கூறும் அரசாங்கத்தின் கூற்றை இவ்வாறான நடவடிக்கைகள் பொய்மைக்கு உட்படுத்துவனவாக அமைகின்றன. அதுவும் ஜநநாயகத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய அரச உயர் அதிகாரிகளே அவற்றை மீறும் விதத்தில் பணியாளர்களை மிரட்டுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அதுபோல் மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்யும் ஊடகவியலாளர்களுக்கு தகவல்கள் செல்வதனை தடுப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது என்பதனை குளோபல் தமிழ்ச் செய்திகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு கூறி வைக்க விரும்புகிறது.

இதேவேளை நாம் பிரசுரிக்கும் செய்திகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்பித் தெரிவித்தால் அவற்றை சம அளவிலான முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கவும் குளோபல் தமிழ்ச் செய்திகள் தயாராக இருப்பதனை பல முறை தெரிவித்து இருக்கிறோம் என்பதனையும் நினைவூட்ட விரும்புகிறோம். அவ்வாறு தமது கருத்துக்களை தெரிவிக்க விரும்புபவர்கள் எமது இணையத்தின் முகப்பு பக்கத்தில் கீழ்பக்கத்தில் தொடர்புகளுக்கு என்ற பகுதியை அழுத்தினால் எம்முடைய தொடர்பு விபரம் முழுமையாக உள்ளது என்பதனையும் அறியத் தருகிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக