வியாழன், 28 பிப்ரவரி, 2013

தாமதம் ஏற்படும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி.......?

News Serviceஐந்து கட்சிகள் இணைந்த கூட்டமைப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகளும் மாத்திரம் இணைந்து தங்களை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவை மேற்கொள்ள அந்நான்கு கட்சிகளும் தீர்மானித்துள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் ஆகிய நான்கு கட்சிகளுமே இந்த தீர்மானத்தை எடுக்க உத்தேசித்துள்ளன. இருப்பினும், இதற்கான இறுதித் தீர்மானம் தமிழரசுக் கட்சியின் முடிவைப் பொறுத்தே அமையும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ முக்கியஸ்தருமான வினோ நோகதாரலிங்கம் தெரிவித்ததாக செய்திக் குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக