வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகியுள்ளதுடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க அந்த உண்ணாவிரத போராட்டத்தில் சற்று முன்னர் இணைந்துக்கொண்டுள்ளார். இந்த உண்ணாவிரத போராட்டம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது. வலி.வடக்கில் இருந்து 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினால் வெளியேறிய மக்கள் 23 வருடங்கள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்றப்படாமல் முகாம்களிலும் தனியார் காணிகளிலும் ,உறவினர்களுடைய வீடுகள் என வசித்து வருகின்றனர் அவர்களை தங்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்ற கோரியும் அங்கிருந்து படையினரை வெளியேறுமாறு கோரியுமே இந்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ள மக்கள் 'மனித உரிமை பேசும் அரசே மக்கள் உரிமையை பறிக்காதே', 'பாதுகாப்பு வலயம் என்று கூறி சிங்கள சகோதரர்களை குடியேற்றாதே', 'மீள்குடியேற்றம் என்று கூறி உலகை ஏமாற்றாதே', ' அரசே மக்கள் ஜனநாயக்தை மதித்து நட' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை நான்கு மணிக்கு நிறைவடையும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக