தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா அதிபர் செயலகம் ஈடுபட்டுள்ளது. நேற்று யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில், நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்… கூட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர்களில் இருவருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் இருந்து 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும், ஈ.சரவணபவன் ஆகிய இருவருக்குமே சிறிலங்கா அதிபரின் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.இதில், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மட்டும் பங்கேற்று, வலிவடக்கு மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறினார்.வலிவடக்கில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பால் 24 கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், 28,270 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அதுதொடர்பான அறிக்கை ஒன்றையும் சிறிலங்கா அதிபரிடம் கையளித்தார்.எனினும், அந்த அறிக்கையிலுள்ள புள்ளிவிபரங்கள் தவறாக இருக்கக் கூடும் என்று மட்டும் கூறி சிறிலங்கா அதிபர் அதனை அலட்சியப்படுத்தியுள்ளார்.அதற்கு நாடர்ளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி, அது சிறிலங்கா அரசின் புள்ளிவிபரங்கள் தான் என்றும் பிரதேச செயலகங்களால் வழங்கப்பட்டவை என்றும் வலியுறுத்தினார்.அதேவேளை இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், ஏனைய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாததைக் கண்டித்து கூட்டத்தை புறக்கணித்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தான் சிறிலங்கா அதிபர் செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டதாகவும் இருவருக்கு மட்டும் அது கிடைத்ததாகவும் ஏனையோருக்கு கிடைக்கவில்லை என்று அவர்கள் பதிலளித்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று யாழ்.மாவட்ட அரசஅதிபர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் நோக்கிலேயே சிலருக்கு மட்டும் சிறிலங்கா அதிபர் செயலகம் அழைப்பை அனுப்பியதாகவும் கருதப்படுகிறது.பல கட்சிகள் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இதன்மூலம் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றனஅதேவேளை, யாழ்.மாவட்டத்தில் இருந்து தெரிவான ஐதேகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரனையும் ஆளும்கட்சி தனது பக்கம் இழுத்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
வியாழன், 14 பிப்ரவரி, 2013
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க சிறிலங்கா அதிபர் செயலகம் சதி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா அதிபர் செயலகம் ஈடுபட்டுள்ளது. நேற்று யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில், நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்… கூட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர்களில் இருவருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் இருந்து 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும், ஈ.சரவணபவன் ஆகிய இருவருக்குமே சிறிலங்கா அதிபரின் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.இதில், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மட்டும் பங்கேற்று, வலிவடக்கு மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறினார்.வலிவடக்கில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பால் 24 கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், 28,270 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அதுதொடர்பான அறிக்கை ஒன்றையும் சிறிலங்கா அதிபரிடம் கையளித்தார்.எனினும், அந்த அறிக்கையிலுள்ள புள்ளிவிபரங்கள் தவறாக இருக்கக் கூடும் என்று மட்டும் கூறி சிறிலங்கா அதிபர் அதனை அலட்சியப்படுத்தியுள்ளார்.அதற்கு நாடர்ளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி, அது சிறிலங்கா அரசின் புள்ளிவிபரங்கள் தான் என்றும் பிரதேச செயலகங்களால் வழங்கப்பட்டவை என்றும் வலியுறுத்தினார்.அதேவேளை இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், ஏனைய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாததைக் கண்டித்து கூட்டத்தை புறக்கணித்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தான் சிறிலங்கா அதிபர் செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டதாகவும் இருவருக்கு மட்டும் அது கிடைத்ததாகவும் ஏனையோருக்கு கிடைக்கவில்லை என்று அவர்கள் பதிலளித்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று யாழ்.மாவட்ட அரசஅதிபர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் நோக்கிலேயே சிலருக்கு மட்டும் சிறிலங்கா அதிபர் செயலகம் அழைப்பை அனுப்பியதாகவும் கருதப்படுகிறது.பல கட்சிகள் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இதன்மூலம் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றனஅதேவேளை, யாழ்.மாவட்டத்தில் இருந்து தெரிவான ஐதேகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரனையும் ஆளும்கட்சி தனது பக்கம் இழுத்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக