யாழ்மாவட்ட இராணுவத் தளபதிக்கு தேவையானால் நான் அரசியல் கற்றுக் கொடுக்க தயாராக இருக்கின்றேன். அவர் தமக்கு நேரமிருந்தால் சொல்லி அனுப்பட்டுமென சவால் விடுத்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்.இன்று யாழ்.நகரில் கூட்டமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மகிந்த கத்துருசிங்கவிற்கு சவால் விடுத்தார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மகிந்த கத்துருசிங்க நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கு எதிராக மான நஸ்டம் கோரி வழக்கு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.அத்துடன் முட்டாள் அரசியல்வாதிகள் கூறுவதை கேட்டு ஊடகங்கள் செய்திகளை பிரசுரிக்க வேண்டாமெனவும் கூட்டமைப்பினரை சீண்டியிருந்தார்.இதற்கு பதிலளித்து இன்று கருத்து வெளியிட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் நான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி. ஆனால் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மகிந்த கத்துருசிங்க அரசிடம் சம்பளம் பெறும் ஒரு அதிகாரி. முதலில் மக்கள் பிரதிநிதிகளுக்கு எவ்வாறு கௌரவம் தருவதென்பதை அவர் கற்றுக் கொள்ளட்டும்.பின்னர் இராணுவம் என்றால் என்ன அரசியலென்றால் என்னவென நான் அவருக்கு கற்பிக்க தயாராகவுள்ளேன். முதலில் அதற்கு அவர் நேரமொதுக்கி வரட்டுமென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அழைப்பு விடுத்துள்ளார். இப்பத்திரிகையாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா சுரேஸ்பிறேமச்சந்திரன் விநாயகமூர்த்தி சிறீதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
வியாழன், 14 பிப்ரவரி, 2013
மகிந்த கத்துருசிங்கவிற்கு அரசியல் கற்றுக்கொடுக்க தயார் நேரமிருந்தால் சொல்லி அனுப்பட்டும் - சரவணபவன்
யாழ்மாவட்ட இராணுவத் தளபதிக்கு தேவையானால் நான் அரசியல் கற்றுக் கொடுக்க தயாராக இருக்கின்றேன். அவர் தமக்கு நேரமிருந்தால் சொல்லி அனுப்பட்டுமென சவால் விடுத்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்.இன்று யாழ்.நகரில் கூட்டமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மகிந்த கத்துருசிங்கவிற்கு சவால் விடுத்தார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மகிந்த கத்துருசிங்க நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கு எதிராக மான நஸ்டம் கோரி வழக்கு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.அத்துடன் முட்டாள் அரசியல்வாதிகள் கூறுவதை கேட்டு ஊடகங்கள் செய்திகளை பிரசுரிக்க வேண்டாமெனவும் கூட்டமைப்பினரை சீண்டியிருந்தார்.இதற்கு பதிலளித்து இன்று கருத்து வெளியிட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் நான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி. ஆனால் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மகிந்த கத்துருசிங்க அரசிடம் சம்பளம் பெறும் ஒரு அதிகாரி. முதலில் மக்கள் பிரதிநிதிகளுக்கு எவ்வாறு கௌரவம் தருவதென்பதை அவர் கற்றுக் கொள்ளட்டும்.பின்னர் இராணுவம் என்றால் என்ன அரசியலென்றால் என்னவென நான் அவருக்கு கற்பிக்க தயாராகவுள்ளேன். முதலில் அதற்கு அவர் நேரமொதுக்கி வரட்டுமென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அழைப்பு விடுத்துள்ளார். இப்பத்திரிகையாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா சுரேஸ்பிறேமச்சந்திரன் விநாயகமூர்த்தி சிறீதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக