எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தில் இடம்பெறும் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு இடையிலான உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வுகளை நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை 11ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சி எதிர்ப்பியக்கத்தில் பங்குபற்றும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முன்னணி பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என ஜனநாயக முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிச கட்சி, நவ சம சமாஜ கட்சி, நவ சிகல உறுமய, முஸ்லிம்-தமிழ் கூட்டணி, ருஹுனு மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, மௌபிம ஜனதா பெரமுன ஆகிய கட்சிகளும் சுதந்திரத்திற்கான மேடை அமைப்பும் இடம்பெறுகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக