யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான காணித்துண்டுகள் மற்றும் கடைகள் திட்டமிடப்படாத நிலையில் வரையறையின்றி கையளிக்கப்பட்ட காணி விபரங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் என்று யாழ். மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“மாநகர சபையினால் சட்டவிரோதமாக கையளிக்கப்பட்ட காணி விபரங்களை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கூட்டம் ஒன்றை நடத்துமாறு நாம் கோரிக்கை விடுத்தோம். அந்த விசேட கூட்டத்திற்கான திகதி இதுவரை காலமும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் கால அவகாசத்துடன் நாம் காத்திருக்கின்றோம்.
யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான காணித்துண்டுகள் மற்றும் கடைகள் திட்டமிடப்படாத நிலையில் வரையறையில்லாமல் பலருக்கு வர்த்தக நோக்கத்திற்காக கையளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இவ்விடயங்கள் குறித்து விவாதிப்பதற்கு விசேட கூட்டமொன்றினை கூட்டுமாறு யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைக்கப்பட்டது.யாழ். மாநகர சபைக்கு சொந்தமான சுமார் 100ற்கு மேற்பட்ட காணித்துண்டுகளும், கடைகளும் திட்டமிடப்படாத நிலையில், வரையறையில்லாது பலருக்கு வர்த்தக நோக்கத்திற்காகவும், வேறு தேவைகளுக்காகவும் கொடுக்கப்பட்டுள்ளன.அவ்விடயங்களை தெளிவு படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இதுவரை காலமும் விசேட கூட்டத்திற்கான திகதி இதுவரை காலமும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் கால அவகாசத்துடன் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.மாதாந்த பொதுக் கூட்டத்திற்குள் உரிய பதில் கிடைக்கப்படாதவிடத்து மாதாந்த பொதுக் கூட்டத்தில் குற்றங்கள் தகுந்த ஆதாரத்துடன் சட்டபூர்வமாக நிரூபிக்கப்படுமென்றும், அவ்விடயங்களின் ஆதாரங்கள்; இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் வடமாகாண ஆளுநர், உள்ளுராட்சி திணைக்களம், உட்பட பல சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு தெரிவிக்கப்படுமென்றும் அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக