செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

ஐநாவில் அமெரிக்காவின் சவாலை எதிர்கொள்ள இலங்கை தயாராகிறது

ஐநாவில் அமெரிக்காவின் சவாலை எதிர்கொள்ள இலங்கை தயாராகிறது ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடர் தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கைகளில் வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

நாளை மறுதினம் (21) இந்த விளக்கமளிக்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது

இதன்போது இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

இதேவேளை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படவுள்ள பரிந்துரைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை முன்வைக்க தீர்மானித்துள்ளது.

இத்தீர்மானத்திற்கு பல நாடுகள் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் என நேற்று தெரிவித்துள்ளதை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக