புதன், 27 பிப்ரவரி, 2013

தலைவர் குடும்பம் எங்கே….? புதிய போர்குற்ற ஆதாரம் (படங்கள்)

2009ம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் இராணுத்திடம் சிக்கிக்கொண்ட பெண் போரளிக்ளை இலங்கை இராணும் விசாரிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தேசிய தலைவரது குடும்ப புகைப்படங்கள், மற்றும் புதிதாக எடுக்கப்பட்ட பொட்டம்மானின் புகைப்படங்களைக் காட்டில் அவர்களில் எவரையாவது நீங்கள் எங்கேயாவது பார்த்தது உண்டா என இலங்கை இராணுவம் மிரட்டி விசாரிக்கிறது. அதுமட்டுமல்லாது சாள்ஸ் அன்டனியின் புகைப்படங்களைக் கூட காட்டி, அவரை எங்கேயாவது பார்த்தது உண்டா என்று பெண் போராளிகளிடம் கேட்க்கிறது இலங்கை இராணுவம். சில இடங்களில் இவர்களை நேரடியாக மிரட்டி அழவைக்கும் காட்சிகளும் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. இவற்றில் சில புகைப்படங்கள் ஐ.நா மனித உரிமைச் சபைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக