புதன், 27 பிப்ரவரி, 2013

எனது மகன் அப்படி சொல்லவில்லை: நான் பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்தவன்

பாசிக்குடா சம்பவத்தில் சில ஊடகங்கள் தன்னைப் பற்றி தவறாக செய்தி வெளியிட்டுள்ளதாகவும் அதனை வைத்துக் கொண்டு சிலர் அரசியல் லாபம் தேடுவதாகவும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனது மகன் அப்படி சொல்லவில்லை: நான் பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்தவன்!பாசிக்குடா கடற்பரப்பில் தனது மகன் ´எனது தந்தைதான் நாட்டின் அடுத்த பிரதமர்´ என கூறி மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் மகனை தாக்கியதாக வெளியான தகவல் பொய் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தான் பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்தவர் எனவும் 2004ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க விசேட காரணத்துக்காக தன்னை கொழும்புக்கு அழைத்ததாகவும் அப்போது தான் பொலன்னறுவையில் இருந்ததாகவும் ஹெலிக்கொப்டர் அனுப்பி தான் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அப்போது சந்திரிக்கா கையில் ஜேவிபி வழங்கிய கடிதம் ஒன்று இருந்ததாகவும் அதில் பிரதமர் பதவி லக்ஷமன் கதிர்காமருக்கு வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இனபேதம் ஏற்படுமானால் அநுர பண்டாரநாயக்கவை நியமிக்குமாறும் அப்படியில்லாவிட்டால் மைத்திரிபால சிறிசேனவை நியமிக்குமாறும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அப்போது தனக்கு பிரதமர் பதவி வேண்டாம் எனவும் அதனை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குமாறும் தான் கோரியதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எனவே பணி செய்ய பதவியை எதிர்ப்பார்க்கும் நபர் தான் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தாக்குதலுக்கு உள்ளான பிரதி பொலிஸ் மா அதிபரின் மகனை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டு உரிய சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக மைத்திரிபால தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக