வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

இறுதிக்கட்ட யுத்த ஷெல் தாக்குதல்களுடன் இராணுவத்திற்கு தொடர்பில்லை - இராணுவ நீதிமன்றம்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படமைக்கும் இராணுவத்திற்கும் தொடர்பில்லை என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தில் பொது மக்கள் வாழும் பகுதிகளுக்கு ஷெல் தாக்குதல் நடாத்தப்பட்டதாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பிலும் யுத்தக் குற்றம் தொடர்பிலும் ஆராய இராணுவ நீதிமன்றம் இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. இந்த இராணுவ நீதிமன்றின் விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில், ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கும் இராணுவத்திற்கும் தொடர்பில்லை என கூறப்பட்டுள்ளது
இறுதிக்கட்ட யுத்த ஷெல் தாக்குதல்களுடன் இராணுவத்திற்கு தொடர்பில்லை - இராணுவ நீதிமன்றம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக