வியாழன், 21 பிப்ரவரி, 2013

தமிழ் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை TNA தடுக்கின்றது – டக்ளஸ்

தமிழ் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை TNA தடுக்கின்றது – டக்ளஸ்தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுத்து நிறுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி வரும் போராளிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களை சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒருபோதும் தமிழக்களுக்கு விடுதலை பெற்றுக் கொள்ள முடியாது எனவும், தமிழர்களை மேலும் நெருக்கடியான நிலைக்கு இட்டுச் செல்ல முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்hளர்.

யுத்தத்தின் பின்னர் கிரமமான முறையில் வடக்கு கிழக்கின் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அரசாங்கம் குறைவத்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்திப் பணிகளினால் தமிழ் மக்களின் வாக்குகளை இழந்து விடும் என்ற அச்சத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கும் போர்வையில் நாட்டில் இடம்பெற்று வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலான ஒத்துழையாமை போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் தேவானந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக