வியாழன், 7 மார்ச், 2013

வடக்கில் 15000 சிங்கள மக்கள் மீள்குடியேற்றப்படுவர் – அரசாங்கம்

வடக்கில் 15000 சிங்கள மக்கள் மீள்குடியேற்றப்படுவர் – அரசாங்கம்வடக்கில் சுமார் 15000 சிங்கள மக்கள் மீள்குடியேற்றப்படுவர் என அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் குறித்த பிரதேசத்தை விட்டு வெளியேறியவர்களே இவ்வாறு மீள் குடியேற்றப்பட உள்ளதாக அரசாங்கம் n;தரிவித்துள்ளது. இதனை சிங்கள மயமாக்கும் முயற்சியாகக் கருதக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ளது.இவர்கள் வெலிஓயா, பதவியா மற்றும் வவுனியா தெற்கு ஆகிய பகுதிகளிலேயே மீள்குடியேற்றப்பட்டவுள்ளதாகத் தெரிவித்துள்ளது, இதேவேளை, வடக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள சிங்கவர்களுக்காக 850 வீடுகளை அரசாங்கம் நிர்மாணிக்கவுள்ளது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாச தெரிவித்துள்ளார். மீள்குடியேற்ற நடவடிக்கைகளை எப்போது முழுமையாக பூரணப்படுத்த முடியும் என்பதனை உறுதிபடக் குறிப்பிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக