ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19/2 தீர்மான வரைபு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சு நடத்த போவதில்லை என்று இலங்கை அறிவித்துள்ளது. ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எதிரான தீர்மானம் தொடர்பாக விவாதிக்க ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலீன் டோனஹே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த கூட்டம் ஜெனிவாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தக்கூட்டத்தில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும், அவதானிப்பாளர் நாடுகளின் பிரதிநிதிகளும், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முற்றாகவே நிராகரிப்பதாகவும், இது குறித்து அமெரிக்காவுடன் பேச்சு நடத்தும் எண்ணம் கிடையாது என்றும் தான் அமெரிக்கப் பிரதிநிதி எலீன் டோனஹேயிடம் தெரிவித்து விட்டதாக ரவிநாத் ஆரியசிங்க மேலும் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக