திங்கள், 11 மார்ச், 2013

BBC தமிழோசை பிரிவுக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வரவேற்பு

பிரித்தானியவிற்க்கு சென்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் கடந்த வாரமளவில் பிரித்தானியா ஒலிபரப்பு கூட்டுத்தாபனதிற்க்கு (BBC) தமிழோசை பிரிவுக்கு சென்று நடு நிலைமையாக இயக்கிவருகின்ற தமிழோசைக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு லண்டன் கிளை தலைவர், உப தலைவர்களுடன் சந்திப்பும் இரவு போசனத்திலும் கலந்து கொண்டார். இச்சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை தொடர்பிலும், அம்பாறை மாவட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக இரா.சம்பந்தன் அவர்களும் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அவர்களும் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக