செவ்வாய், 5 மார்ச், 2013

இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது – அமெரிக்கா

இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது – அமெரிக்காஇலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய முனைப்பு காட்டத் தவறியதனால் இவ்வாறு கொள்கைளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக விசாரணை நடாத்த ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென ஐ.நா உறுப்பு நாடுகளில் சிலவும், மேலும் சில நாடுகளும் முனைப்பு காட்டி வருவதாக அமெரிக்க ஜனநாயகம் மற்றும் உரிமைகளுக்கான துணைச் செயலாளர் மைக்கல் பொஸ்னர் தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்கா அவ்வாறான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக