செவ்வாய், 5 மார்ச், 2013

பொன்சேகாவுக்கு சுகயீனம்: வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் மோ மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா சுகயீனம் காரணமாக இன்று (05) நீதிமன்றில் ஆஜராகவில்லை. இதன் காரணமாக வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இராணுவ வீரர்களை தேர்தல் கடமைகளுக்காக பயன்படுத்தியமைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு இன்று (05) கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, சுகயீனம் காரணமாக சரத் பொன்சேகா இன்றைய வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்க முடியாது போயுள்ளதாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றிற்கு அறிவித்தார். இதன் பின்னதாக வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிமன்ற அறிவித்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக