ஜெனீவா தீர்மானம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு எவ்வாற முகம் கொடுப்பது என்பது பற்றி அரசாங்கம் இதுவரையில் அறிவிக்கவில்லை. சர்வதேச சுயாதீன விசாரணைகளை ஏற்றுக் கொள்வதா அல்லது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதா என்பதனை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். 13ம் திருத்தச் சட்டம், வட மாகாணசபைத் தேர்தல், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரை அமுல்படுத்தல் போன்றன குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார். புதிதாக அமைக்கப்பட்டு வரும் மத்தள விமான நிலையத்தில் இந்த பேச்சுவார்த்தைகளை நடாத்த விரும்புகின்றேன் எனவும் எதிர்வரும் மாதம் இப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டால், எதிர்வரும் ஜூன் மாதமளவில் வடக்கில் தேர்தல்களை நடாத்த முடியும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ரணில் விக்ரமசிங்க ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பிற்கு ஊடகவியலார்கள் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
வியாழன், 14 மார்ச், 2013
ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அரசின் அடுத்த கட்டம் என்ன? தெளிவுபடுத்தவேண்டும் என்கிறார் ரணில் விக்ரமசிங்க
ஜெனீவா தீர்மானம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு எவ்வாற முகம் கொடுப்பது என்பது பற்றி அரசாங்கம் இதுவரையில் அறிவிக்கவில்லை. சர்வதேச சுயாதீன விசாரணைகளை ஏற்றுக் கொள்வதா அல்லது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதா என்பதனை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். 13ம் திருத்தச் சட்டம், வட மாகாணசபைத் தேர்தல், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரை அமுல்படுத்தல் போன்றன குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார். புதிதாக அமைக்கப்பட்டு வரும் மத்தள விமான நிலையத்தில் இந்த பேச்சுவார்த்தைகளை நடாத்த விரும்புகின்றேன் எனவும் எதிர்வரும் மாதம் இப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டால், எதிர்வரும் ஜூன் மாதமளவில் வடக்கில் தேர்தல்களை நடாத்த முடியும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ரணில் விக்ரமசிங்க ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பிற்கு ஊடகவியலார்கள் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக