புதன், 20 மார்ச், 2013

தமிழ்நாட்டுக்கான சுற்றுலாப் பயணங்களை மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு கோத்தபாய உத்தரவு!

News Serviceதமிழ்நாட்டில் பௌத்த பிக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, தமிழ்நாட்டுக்கான சுற்றுலாப் பயணங்களை மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு சுற்றுலா பயண முகவர்களுக்கு சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், தேவையற்ற சம்பவங்கள் நிகழ்வதையும், தமிழ்நாடு செல்லும் பயணிகளின் தொகையை குறைப்பதற்கும் இதைவிட சிறிலங்கா அரசுக்கு வேறு வழி இல்லை என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கும் பயணம் மேற்கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் உத்தரவை மீறி தமிழ்நாட்டுக்கு சிறிலங்கா பயணிகளை அழைத்துச் செல்லும் முகவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பயண எச்சரிக்கையை பொதுவாக வெளிவிவகார அமைச்சே வெளியிடுவது வழக்கம். ஆனால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு பயண எச்சரிக்கையை விடுக்க தயக்கம் காட்டிவருவதாலேயே, சிறிலங்கா பாதுகாப்புச்செயலரே நேரடியாக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சென்னைக்கான சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானங்களின் சேவையை பாதியாக குறைக்கும்படியும் கோத்தாபய ராஜபக்சவே உத்தரவிட்டதாகவும் தெரியவந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக