யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கையுடன் இரகசிய உடன்பாடு எட்டப்பட்டிருந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையின், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற் பரப்புக்கள் மற்றும் கரையோரப் பகுதிகளுக்குள் இந்திய மீனவர்கள் பிரவேசிக்க மாட்டார்கள் என இந்தியா உறுதியளித்திருந்தது.2008ம் ஆண்டு உச்ச கட்ட யுத்தம் நடைபெற்ற போது இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டு சில வாரங்களில் பூணகரி பகுதியை இலங்கைப் படையினர் கைப்பற்றியதாகவும் இதன் பின்னர் புலிகளின் கடல் வழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இந்திய பாராளுமன்றில் உரையாற்றிய அந்நாட்டு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டனி இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் முக்கிய பகுதிகளில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட மாட்டார்கள் என இணங்கப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக