வியாழன், 14 மார்ச், 2013

செம்மணிபாலத்தினுள் விழுந்து ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

யாழில் பொறுப்பற்ற நிர்மாணப் பணிகளால் ஒருவர் பலி (படங்கள்) யாழில் உரிய பாதுகாப்பு பொறிமுறைகள் அமைக்கப்படாது, புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பாலத்தினுள் விழுந்து ஒருவர் உயிர் இழந்துள்ளார். யாழ். செம்மணி வீதியில் செம்மணி இந்து மயானத்திற்கு அருகில் பாதுகாப்பு பொறிமுறைகள் அமைக்கப்படாது புதிதாக பாலம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. அந்த பாலத்திலேயே நேற்று (13) நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வந்தவர் தவறி விழுந்து உயிர் இழந்துள்ளார். குறித்த பாலம் அமைக்கும் வேலைகள் பல நாட்களாக மந்த கதியிலேயே நடைபெற்று வருவதாகவும் உள்ளூரில் உள்ள ஒப்பந்தகார் ஒருவராலேயே இந்த பாலம் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முதலிலும் இவ்விடத்தில் பல விபத்துக்கள் நடைபெற்றிருந்த போதிலும் இதுவரையும் உரிய பாதுகாப்பு பொறிமுறை அமைக்கப்படாத காரணத்தினாலேயே நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.யாழ். செம்மணிபாலத்தினுள் விழுந்து ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக