சகல அரசியல் கட்சிகளும், சகல இன மக்களும் உள்ளடங்கக் கூடிய வகையில் இந்த அமைப்பு அமைக்கப்பட வேண்டும். இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடியவற்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார்.
ஜெனீவாவில் அமரிக்காவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே ஜெனீவா பிரேரணைக்குறித்து அரசாங்கம் இதுவரையில் அறிவிக்கவில்லை. எனவே சர்வதேச சுயாதீன விசாரணைகளை ஏற்றுக் கொள்வதா அல்லது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதா என்பதனை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.
13ம் திருத்தச் சட்டம், வட மாகாணசபைத் தேர்தல், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரை அமுல்படுத்தல் போன்றன குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் தென் கிழக்காசியாவில் வடக்கு தமிழர்கள் போன்று துன்பியல் அனுபவங்களை எதிர்நோக்கியவர்கள் எவரும் கிடையாது என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் குறிப்பிட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக