மக்கள் கதறி அழுதும் கண்டுகொள்ளாத வவுனியா அரசாங்க அதிபர்!
வவுனியாவில் காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கதறி அழும் உறவுகளைச் சந்திப்பதற்கு பெரும்பாண்மையின அரச அதிபர் மறுத்துள்ளார். இன்று காலை வவுனியா நகரசபை மைதானத்தில் தமது உறவுகளை மீட்டுத்தாருங்கள் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து அரச அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளிப்பதற்காக மாவட்ட செயலகம் நோக்கிச் சென்றனர். அவர்களை உள்நுழை விடாது பொலிஸார் தடுத்து வைத்துள்ளதுடன் மக்களை வெளியில் வந்து சந்தித்து மகஜரைப் பெற்றுக் கொள்வதற்கும் அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர மறுப்புத் தெரிவித்துள்ளார். எனினும் இவர்கள் சார்பாக ஒரு சில பிரதிநிதிகளைச் வேண்டும் என்றால் சந்திக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மக்களுடைய அவலத்தையும் அவர்களது உணர்வுகளைம் புரிந்து கொள்ள முடியாத அரச அதிபர் எவ்வாறு எங்களது தேவையினை நிறைவேற்றுவார் என கலந்து கொண்டிருந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையிலும் எங்கள் பிள்ளைகள் எங்கே அவர்களைக் காட்டுங்கள் என மக்கள் கதறியழுத வண்ணம் உள்ளதுடன் எங்கள் பிரதேசத்தில் எங்களுடைய உணர்வுகள் புரியாத அரச அதிபர் ஏன் இருக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உறவுகள் தெரிவிக்கின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக