வியாழன், 7 மார்ச், 2013

தொடர்ந்தும் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்தால் தனி ஈழம் கோருவோம் - டி.ஆர்.பாலு!

News Serviceஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக மக்களவையில் விவாதம் தொடங்கியது. இலங்கை தமிழர் விவாதம் மற்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து மக்களவையில் விவாதிக்க பட வேண்டும் திமுக, அதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியது. இலங்கை விவகாரம் பற்றி அவை விதி 193ன் கீழ் விவாதிக்க மக்களவைத் தலைவர் மீராகுமார் அனுமதி அளித்தார். இந்த விவாதத்தை திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு துவக்கி வைத்து பேசினார், மேலும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், இடதுசாரி உறுப்பினர்களும் விவாதத்தில் பேச இருக்கின்றனர். இலங்கைக்கு எதிரான தீர்மானம் மற்ற நாடுகள் தங்களின் நிலையை உறுதி செய்துள்ள நிலையில், இந்திய அரசு மட்டும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழ்ப் பெண்களின் மீதான கொடுமைகள் இன்றும் தொடர்கிறது: டி.ஆர்.பாலு

விவாதத்தை தொடக்கி வைத்த பேசிய டி.ஆர்.பாலு, இலங்கையில் பல ஆண்டுகளாக நடக்கும் போரால் தமிழர்களின் வாழ்க்கை உடைந்து நொறுங்கிப்போய் உள்ளதாக கூறினார். இலங்கைப் போரால் 90,000 தமிழ் பெண்கள் கணவரை இழந்து விதவை ஆகியுள்ளதாகவும், 1,20,000 பேர் தங்கள் வீடுகளை இழந்து இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக பாலு தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைத் தமிழ்ப் பெண்களின் மீதான கொடுமைகள் இன்றும் தொடர்கிறது. என்றும் டி.ஆர்.பாலு வருத்தம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக