வியாழன், 14 மார்ச், 2013

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும்: அமுனுகம நம்பிக்கை வெளியீடு

newsஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா இறுதிநேரத்தில் எதிர்க்கும் என வெளிவிவகாரச் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவினால் எதிர்வரும் 22ஆம் திகதி ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முன்வைக்கும் தீர்மானத்திற்கான இறுதி நகல் வரைபு சமர்ப்பிக்கப்படும் போது இந்தியா தீர்மானம் எடுக்கும்.

இந்தியாவின் பதில் குறித்து ஆவலுடன் காத்திருந்தாலும் கூட இந்தியா எமக்கு ஆதரவளிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எம்மிடம் இருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக