செவ்வாய், 12 மார்ச், 2013

ஐநாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தற்கு ஆட்பிடிப்பு –

கடந்த ஆண்டினை போன்றே இம்முறையும் அரசு தனது வழைமையான ஜெனீவாவிற்கான ஆர்ப்பாட்டங்களை தொடங்கியுள்ளது. இன்று முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியினில் வழைமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆள்பிடிக்கும் நடவடிக்கைகளை காலை முதல் படைத்தரப்பு ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஏ-9 வீதியினூடாக செல்லும் வாகனங்கள் கூட வழி மறிக்கப்பட்ட பயணிகள் இறக்கப்பட்ட ஆர்;ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக சிவில் பாதுகாப்பு குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பலரும் பண்ணைகளிலிருந்து பிடித்து செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்முடன் தொடர்பு கொண்ட அப்போராளிகளில் சிலர் தம்மில் பலர் விடயம் என்ன என்பதைக் கூட தெரியாது பேருந்தகளில் ஏற்றிச்செல்லப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தம்மையும் கண்டன பேரணியினில் ஈடுபடுத்த உள்ளதாகவும் அச்சம்; வெளியிட்டுள்ளனர்;.

கடந்த ஆண்டிலும் இதே போன்று இராணுவப்புலனாய்வு பிரிவினர் ஒரு புறம் மற்றொரு புறம் ஈபிடிபி மற்றும் சுதந்திரக்கட்சியினரென பலரும் இதே போன்று கட்டாய ஆட்பிடிப்பில் கேலியான கண்டன ஆர்ப்பாடடங்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இணைப்பு 2 -ஐ.நாவுக்கு எதிராக வவுனியாவில் ஆர்பாட்டம் ஏற்பாடு:

சிவில் படைகளில் இணைக்கப்பட்டவர்களை இதில் கலந்து கொள்ளுமாறு நிர்பந்திக்கலாம்?

ஐக்கியநாடுகள் சபையின் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை எதிர்த்து வவுனியாவில் ஒரு ஆர்பாட்டத்தை நடத்த இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்றைய தினம் வவுனியாவில் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கான தீவிர நடவடிக்கைகளில் இலங்கைப் படையினரும் அரச ஆதரவுக்கட்சிகளும் ஈடுபட்டுள்ளதாக வன்னியில் இருந தகவல் கிடைத்துள்ளன.

இந்நிலையில் இரணைமடுவில் படையினரின் தலமையகத்திற்கு அருகில் உள்ள பண்ணை, முழங்காவிலுக்கு போகும் வழியில் ஜெயபுரத்திற்கு அருகாமையில் உள்ள பண்ணை, விசுவமடுப் பகுதியில் உள்ள படையினரின் பண்ணைகள் மற்றும் முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள படையினரின் பண்ணைகளில் சிவில் படையாக வேலை செய்பவர்களை இன்றையதினம் ஒரு உணவுப் பொதியுடன் படையினர் அழைத்திருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது. ஐநாவுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஊர்வலத்திற்கு சுமார் இரண்டாயிரம் பேரை படையினர் இலக்கு வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்தின் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஏற்கனவே புனர்வாழ்வுக்கு உட்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகலான 2200 பெண்களையும் 800 ஆண்களையும் சிவில் உத்தியோகத்தர்கள் என்ற தற்காலிக நியமணத்தில் இணைத்துக் கொண்டது. எனினும் இவர்கள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கிய பண்ணைகளில் கட்டாயப் படுத்தி வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக