செவ்வாய், 12 மார்ச், 2013

டெசோ பந்த் : பெரிய பாதிப்பில்லை

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி, திமுக உருவாக்கியிருக்கும் டெசோ அமைப்பு சார்பில் இன்று செவ்வாய் தமிழகமெங்கும் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
ஆனால் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புக்களும் பல்வேறு காரணங்களைக்கூறி, பொதுவேலை நிறுத்தத்திற்கான அழைப்பினை நிராகரித்துவிட்ட நிலையில், டெசோவின் போராட்டம் மாநிலத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.ஆங்காங்கே கடைகள் சில மூடப்பட்டிருந்தன. அவ்வளவே. மற்றபடி வாகனப் போக்குவரத்து மாமூலாகவே இயங்கியது.சில கடைகள் திறந்திருந்தனபுதுச்சேரியிலும் டெசோ போராட்டம் நடைபெற்றது.
ஆனால் எங்கும் வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.
ஸ்டாலின்,வீரமணி, திருமாவளவன் கைதுஅ இஅதிமுக அரசு போராட்டம் நடைபெறவிடாமல் பொதுமக்களை மிரட்டியதாகக் குற்றஞ்சாட்டி சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த திமுக பொருளாளர் ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் திமுக தலைவர்கள் கைதாயினர்முழுக்கடையடைப்புப் போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும் என டெசோ தெரிவித்துள்ளது.
டெசோ அழைப்பை நிராகரிப்பதாகக் கூறும் சில மாணவர் அமைப்புக்கள் இன்று தாங்கள் ஆர்ப்பாட்டம் எதுவும் நடத்தவில்லை, நாளை தொடரவிருக்கிறோம் என அறிவித்திருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக