வன்னியில் நடைபெற்ற யுத்தத்தின் போது காணாமல் போனதாக கூறப்படும் எவரும் சிறைச்சாலைகளிலோ புனர்வாழ்வு முகாம்களிலோ தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை. நீங்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் பயனற்றது என வன்னி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா தெரிவித்தார். வவுனியா இராணுவ படைத்தலைமையகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
வன்னியில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் போனதாக கூறி அரசுக்கும் இராணுவத்தினருக்கும் எதிராக சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டங்களை ஆர்ப்பாட்டங்களைச் செய்து வருகின்றனர்.
இவ்வாறு ஆர்ப்பாட்டங்களை செய்வதால் எந்தவிதமான பயனும் .இல்லை. காணாமல் போனவர்கள் என்று எவரும் சிறைச்சாலைகளிலோ புனர்வாழ்வு முகாம்களிலோ தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை நான் பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற ரீதியில் தெரிவிக்கின்றேன்.
இதேவேளை, விடுதலைப்புலிகள் காலத்தில் முல்லைத்தீவில் நடைபெற்ற யுத்தத்தில் இராணுவத்தினர் 1300 மேற்பட்டவர்கள் காணாமல் போனார்கள் அவர்கள் இன்றுவரையும் திரும்பி வரவில்லை. அவர்களுடைய உறவுகளும் வருவார்கள் என்ற நம்பிக்கையில் தான் இருந்தனர். ஆனாலும் ஒரு வருடம் கடந்தும் அவர்கள் வராமையினால் அவர்களுக்கான இறப்பு சான்றிதழ் அவர்களுடைய உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக