இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்து சுற்றுலா சென்ற சிங்கள பௌத்த துறவிகள் தஞ்சாவூரில் தாக்கப்பட்டு உள்ளனர்.
இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக அரசியல் கட்சிகளின் சார்பில்லாமல் தன்னெழுச்சியாக தமிழக மாணவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். தமிழகமே மாணவர் போராட்ட அலைகளால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் குக்கிராமங்களிலும் கூட இந்தப் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்நிலையில் இலங்கையிலிருந்து சிங்கள பௌத்த துறவிகள் குழு ஒன்று தஞ்சாவூருக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
அவர்கள் தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பார்வையிட சென்ற போது தமிழ் அமைப்பினர்கள் அவர்களை தாக்கியுள்ளனர். சிங்கள பௌத்த துறவிகள் சத்தமிட்டவாறு திசைக்கு ஒருவராய் தப்பி ஓடினர். தமிழ் அமைப்பினர் தாக்குதலில் பல சிங்கள பௌத்த துறவிகளுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. தாக்குதலில் இருந்து தப்பிய அவர்கள் தொல்லியல் துறை அலுவலகத்துக்குள்ளே சென்று தஞ்சம் கோரியிருந்தனர். சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல் இலங்கையிலிருந்து சுற்றுலாவுக்காக சென்ற சிங்கள பௌத்த துறவிகள் தமிழகத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக