செவ்வாய், 5 மார்ச், 2013

சிறீலங்காவின் தற்போதைய போக்குக் குறித்து கனடா கவலையடைகிறது - கனடா எம்.பி. பிரட் பட்

News Serviceஒன்ராரியோ மாகாணத்தின் மிசிசாகா-ஸ்றீற்ஸ்வில் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொன்சவ்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ பிரட் பட் (டீசயன டீரவவ) தற்போதைய சிறீலங்கா நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். "சிறீலங்காவில் தற்போதும் தொடர்வதாகக் கூறப்படும் பாரதூரமான குற்றச்செயல்கள், போர்க்குற்றங்கள் போன்றவை குறித்தும், அங்கு அடக்குமுறைகள் அதிகரித்துச் செல்வதாக வெளிவரும் தகவல்கள் குறித்தும் கனடிய அரசு கவலையடைகிறது. அங்கே நடப்பதாக அறிவிக்கப்படும் விடயங்கள் குறித்து நாம் திருப்தியடைய News Serviceமுடியவில்லை. கனடிய பிரதமர் ஸ்ரீவன் காப்பர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜோண் பெயர்ட் ஆகியோர் ஏற்கனவே இத்தகைய போர்க்குற்றங்கள் மற்றும் மோசமான குற்றச்செயல்கள் குறித்து தங்கள் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்இந்த வாரம் நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கேட்ட கேள்வியொன்றிற்கு கனடியப் பிரதமர் தனது தெளிவான நிலைப்பாட்டை பதிலாக வழங்கினார். சிறீலங்காவில் போதிய வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறுதல், நீதியான விசாரணை போன்றவை இடம்பெறாவிட்டால், சிறீலங்கா அரசு, மனித உரிமை விடயங்களில் போதிய முன்னேற்றத்தைக் காணாதுவிட்டால் அங்கு நடைபெற ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் கனடா கலந்துகொள்ளாது என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று பிரதமர் ஸ்ரீவன் காப்பர் குறிப்பிட்டிருந்தார். கடந்த மார்ச் மாதத்தில், கிறிஸ் அலெக்சாந்தர் உட்பட, முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் அடங்கிய விசேட குழுவொன்றை, பிரதமர் ஸ்ரீவன் காப்பர் சிறீலங்காவுக்கு அனுப்பி நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். அங்கு நிலைமைகள் திருப்திதரும் வகையில் இல்லை என்பதை அந்தக்குழு அறிக்கையாக சமர்ப்பித்திருந்தது. சிறீலங்காவில் நடைபெற்றிருக்கக்கூடிய மிக மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தெளிவான ஓர் விசாரணையை மேற்கொள்ள சர்வதேச அழுத்தங்களை அதிகரிப்பதற்கு கனடா பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையும் தனது முயற்சிகளை அதிகரித்துள்ளது. பல சந்தர்ப்பங்களில், அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் சர்வதேச அழுத்தங்கள், வெற்றியைக் கொண்டுவந்திருக்கின்றன. அதனால், கனடா ராஜதந்திர முறையிலும் பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்தே வருகிறது. சிறீலங்காவில் மதரீதியான பிரச்சனைகளும் எழுந்துள்ளன என்பதை அறிகிறோம். அனைத்து மதங்களையும் பண்பாடு மற்றும் இன உணர்வுகளையும் மதிக்கும் நாடு கனடா. ஜனநாயகரீதியாக மக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை உரிமைகள் விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் கனடா தயாராக இருந்ததில்லை. இதையே ஏனைய ஜனநாயக நாடுகளிலும் எதிர்பார்க்கிறோம். ஒன்ராரியோவில் வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக மிசிசாகாவாழ் தமிழர்கள், சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அங்கு தொடரும் அதிகரித்த வன்முறைகள் தொடர்பாக தங்களது நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு விளக்கம் தந்துள்ளார்கள். கனடிய அரசு இது தொடர்பாக அக்கறையும் கரிசனையும் கொண்டுள்ளது. கனடிய ஆளும் கொன்சவ்வேட்டிவ் அரசு, தொடர்ந்தும் சிறீலங்காவில் இழைக்கப்படும் அநீதிகளுக்கும் போர்க்குற்றச் செயல்களுக்கும் நீதியான விசாரணையும் தீர்வும் கிடைக்க தன்னாலான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கும்". இவ்வாறு தெரிவித்த கௌரவ பிரட் பட் அவர்கள், கனடாவின் ஏனைய கொள்கை நிலைப்பாடுகள் தொடர்பாகவும் பிறிதொரு செவ்வியை வழங்கினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக