ஐ.நாவில் அமெரிக்காவுக்கு 30 நாடுகள் ஆதரவு: கிட்டத்தட்ட நிச்சயம் !
இலங்கைக்குஎதிராகநாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்திற்கு 30 நாடுகள் ஆதரவு அளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவினால் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்படுவதால், நேரடியாக 30 நாடுகள் ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 30 நாடுகளில் ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய வலய நாடுகள் உள்ளடங்குகின்றன. தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதா இல்லை என்பது குறித்த இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு இன்னமும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்தியாவும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் என ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளையில், மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிடுமாறு இலங்கை, உலக நாடுகளிடம் கோரி வருகின்றது. இது தொடர்பாக ஜெனீவாவில் விசேட தெளிவுபடுத்தல் சந்திப்புகளை இலங்கை பிரதிநிதிகள் ஆரம்பித்துள்ளனர். பெரும்பாலும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மேலதிக பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தற்போது நிலைமை உள்ளது.
கடந்த ஆண்டு இதே ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டில், இதே அமெரிக்கா, இதே இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட தீர்மானத்துக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தது. எதிராக 15 நாடுகள் வாக்களித்தது. 8 நாடுகள் வாக்களிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக