ஞாயிறு, 17 மார்ச், 2013

ஐ.நா பிரதிநிதி இலங்கை விஜயம் செய்ய விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திர பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பிரான்க் லா ரூ விடுத்த கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா பிரதிநிதி இலங்கை விஜயம் செய்ய விடுத்த கோரிக்கை நிராகரிப்பு
2012ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஐ.நா விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தாகவும், அந்தக் கால வரையறை பூர்த்தியடைந்துள்ளதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது.இதனை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனிவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 19-2 தீர்மானத்தின் அடிப்படையில் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்யக் கோருவதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக