அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் முன்வைக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேர்வின் சில்வாவின் செயற்பாடுகள் சுதந்திர கட்சியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிளவினை ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளது. அண்மையில் களனி நகர சபை உறுப்பினர்களுடன் முறுகலில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் அந்த நகரசபையின் உறுப்பினர் ஒருவரது கொலையுடன் மேர்வின் சில்வாவின் செயலாளர் தொடர்புபட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளருமான மைத்திரிபால சிறிசேன குறித்து அவர் வெளியிட்டிருந்த கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த நிலையில் இந்த வாரம் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தின் போது, அவருக்கு எதிரான தீர்மானம் ஒன்றை முன்வைக்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுதீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
செவ்வாய், 12 மார்ச், 2013
அமைச்சர் மேர்வினிற்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானம்!
அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் முன்வைக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேர்வின் சில்வாவின் செயற்பாடுகள் சுதந்திர கட்சியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிளவினை ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளது. அண்மையில் களனி நகர சபை உறுப்பினர்களுடன் முறுகலில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் அந்த நகரசபையின் உறுப்பினர் ஒருவரது கொலையுடன் மேர்வின் சில்வாவின் செயலாளர் தொடர்புபட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளருமான மைத்திரிபால சிறிசேன குறித்து அவர் வெளியிட்டிருந்த கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த நிலையில் இந்த வாரம் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தின் போது, அவருக்கு எதிரான தீர்மானம் ஒன்றை முன்வைக்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக