இறுதி யுத்தத்தின்போது ஸ்ரீலங்கா அரசு மற்றும், இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரேரணை ஒன்றை அமெரிக்கா ஜெனீவாவில் முன்வைக்கவிருப்பதால் செய்வதறியாது திகைத்துள்ள இலங்கை அரசு, ஐ.நாவிற்கு எதிராக விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை களமிறக்கவுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது,
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிவில் பாதுகாப்பு படையில் பணியாற்றிவரும் முன்னாள் விடுதலைப்புலிகளை ஒருங்கிணைத்து இன்றைய தினம் பாரிய ஐ.நா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக அறியவருகின்றது. இதற்காக அவர்களை சீருடையை தவிர்த்து சாதாரண உடையில் வருமாறும், உணவு பொட்டலம் ஒன்றினை எடுத்துவருமாறும் இராணுவத்தினரால் பணிக்கப்பட்டுள்ளனர். எனினும் இது தொடர்பில் விருப்பமில்லாத குறித்த போராளிகளை அச்சுறுத்திய ஸ்ரீலங்கா இராணுவம் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுக்காதுவிடின் 6 நாட்கள் வேலைக்கு சமூகமளிக்கவில்லையென கணக்கெடுக்கப்படும் எனவும், வேலைகள் நிரந்தரமாக பறிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளர். கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவில் இவ்வாறு 8,000 வரையானவர்கள் சிவில் மற்றும் ஏனைய இராணுவம் சார்ந்த துறைகளில் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக