சனி, 16 மார்ச், 2013

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களால் குழப்பத்தில் படையினர் - தளபதி அறிக்கை!

News Serviceஇலங்கை இராணுவம் மீது ஜெனிவாவில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்துப் படையினர் மிகுந்த குழப்பத்துக்குள்ளாகி இருப்பதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார். இராணுவ ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. படையினருக்கு எதிராக விசமனத்தனமான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து படையினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கோரியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: வன்னியில் மனிதாபிமான நடவடிக்கையை தீர்க்கமான முடிவோடு முன்னெடுத்த எம்மீது ஒரு தலைப்பட்சமாக ஜெனிவாவில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பது எம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. வன்னித் தளபதியாக நான் பணியாற்றிய காலத்தில் எனக்கோ அல்லது வேறு பிரிவுத் தளபதிகளுக்கோ இராணுவத்துக்கு எதிராகத் தற்போது குரல் எழுப்பிக் கொண்டிருப்பவர்களிடம் இருந்து எந்தவித முறைப்பாடும் கிடைத்திருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் இப்படியான முறைப்பாடுகள் படையினருக்கு எதிராகவோ அல்லது குறிப்பிட்ட களத் தளபதிகளுக்கு எதிராகவோ ஏன் செய்யப்படவில்லை என்பது சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டியதாக உள்ளது. போர் முடிவுற்றதின் பின்னர் பல்வேறுபட்ட சுயநலத் தரப்புகளால் விசமத்தனமான மற்றும் மறைமுக நோக்கங்களுடன் நம்பமுடியாத குற்றச்சாட்டுகள் படைகள் மீது சுமத்தப்பட்டு வருகின்றன. இலங்கை இராணுவம் உலகின் மிகப் பயங்கரமான இயக்கம் ஒன்றை முழுமையான அழித்துள்ளது பற்றி இவர்கள் பாராட்டு எதையும் தெரிவிக்க முன்வருகிறார்கள் இல்லை. இந்த முயற்சியில் ஏராளமான வீரர்கள் தம் உயிரிகளைப் பலிகொடுத்துள்ளனர் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக