சனி, 2 மார்ச், 2013

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான யோசனை மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்படும் நிலைமை காணப்படுகின்றது

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான யோசனை எதிர்வரும் 23 ஆம் திகதி மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்படும் நிலைமை இருப்பதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான யோசனை மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்படும் நிலைமை காணப்படுகின்றது :
எனினும் அந்த யோசனை அமுல்படுத்தவோ, அதற்கான அழுத்தங்களை இலங்கைக்கு கொடுக்கவோ, சந்தர்ப்பம் இருக்காது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இலங்கை கடுமையாக மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட நாடு எனக் காட்டுவதே அந்த யோசனையை கொண்டு வரும் நாடுகளில் மற்றும் அதனை ஆதரிக்கும் நாடுகளின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு செய்து, இலங்கையை அவமதிப்பு உட்படுத்தி இலங்கைக்கு எதிராக தடைகளை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதற்காக அவர்கள் மிகவும் சூட்சுமான முறையில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக