சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் குறித்து இத்தாலிய புலனாய்வுப் பிரிவினர் இலங்கைத் தூதுவரிடம் வாக்கு மூலமொன்றை பதிவு செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.அண்மையில் இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் குறித்து குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கருத்துக்கள் தொடர்பில் தகவல்களை சேகரித்துக் கொள்ளும் நோக்கில் இத்தாலிய புலனாய்வுப் பிரிவினர் இலங்கைத் தூதுவரை சந்தித்துள்ளனர்.இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் அசித பெரேரா, சிரேஸ்ட இராஜதந்திரிகள், தூதரக அதிகாரிகள் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க எழுத்து மூலமான சான்றுகள் உண்டா என புலனாய்வுப் பிரிவினர், தூதுவர் அசித பெரேராவிடம் கோரியுள்ளனர். எவ்வாறெனினும், இறுதியில், எழுத்து மூலமான ஆவணங்கள் இன்றி முறைப்பாடு குறித்த உத்தியோகபூர்வ வாக்கு மூலத்தை பதிவு செய்ய முடியாது என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்ததாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக