புதன், 20 மார்ச், 2013

யாழ்ப்பாணத்திலும் ஆர்ப்பாட்டம்! புலிகளின் முன்னாள் போராளிகளும் பலவந்தமாக இணைக்கப்பட்டனர்:-

யாழ்ப்பாணத்திலுள்ள கட்டிட மற்றும் வீதி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிங்கள தொழிலாளர்கள் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்கள் சகிதம் இலங்கை அரசாங்கம் இன்று கண்டன ஆர்ப்பாட்டமொன்றை யாழ்நகரில் நடத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்திலும் ஆர்ப்பாட்டம்! புலிகளின் முன்னாள் போராளிகளும் பலவந்தமாக இணைக்கப்பட்டனர்:-இவர்களுடன் இன்று காலை படைமுகாம்களுக்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்தகொள்ள வைக்கப்பட்டிருந்தனர் எனக் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.ஜெனீவா அமெரிக்கா மற்றும் இந்தியா என அனைத்து தரப்புக்களையும் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த ஆர்ப்பாட்டகாரர்கள் இறுதியில் கொடும்பாவியொன்றினை தீக்கிரையாக்கினர். அவ்வேளையில் அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர்களக்கு அது நவநீதம்பிள்ளையின் கொடும்பாவி என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும் இவ்வார்ப்பாட்டத்தினை முழுமையாக ஏற்பாடு செய்திருந்த படை அதிகாரிகள் பலரும் சிவில் உடையில் அப்போராட்டம் முடிவுறும் வரையில் நின்றிருந்தனர்.
யாழ்நகரின் முனீஸ்வரர் கோவிலின் முன்றலில் புறப்பட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் நகரின் அனைத்து வீதிகளிலும் சுற்றி வந்தனர்.
இறுதியாக மத்திய பேருந்து நிலையத்தின் முன்றலில் கொடும்பாவி எரிப்புடன் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தது என அங்கிருந்து தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கிளிநொச்சி மன்னார் வவுனியாவென இதே பாணியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தற்போது யாழ்ப்பாணத்திலும் அத்தகைய போராட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.சுதந்திரக்கட்சியின் யாழ.;மாவட்ட அமைப்பாளர் இராமநாதன் அங்கயன் ஒரு பகுதி மக்களை அழைத்து சென்றிந்திருந்தார். ஆர்ப்பாட்ட முடிவில் விடுதலைப்புலிகளது முன்னாள் ஊடகப்பேச்சாளர் உட்பட சிலர் உரையாற்றியிருந்தனர்.
அழைத்து செல்லப்பட்ட அனைத்து சிங்கள தொழிலாளர்களுக்கும் புலனாய்வு பிரிவினருக்கும் அவசர அவசரமாக குங்குமப்பொட்டு டப்பாக்கள் வழங்கப்பட்டு நெற்றியில் அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. (குங்குமம் தமிழ் மக்கள் மங்களகரமாக நெற்றியில் அணிவத போலவே உள்ளுர் மக்கள் விதியோரங்களினில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
பலவந்தமாக அழைத்து செல்லப்பட்ட முன்னாள் போராளிகள் தம்மை புகைப்படம் பிடிக்காதிருக்க தலைகளை மறைத்தவாறு விலகி நடந்திருந்தனர். திட்டமிடப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தினால் நகரின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக