ஞாயிறு, 3 மார்ச், 2013

யாழில் திடீர் வெடிப்புச் சம்பவம்: அறுவர் வைத்தியசாலையில்

யாழ். ஊர்காவற்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் விமானப்படை வீரர்கள் அறுவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

யாழில் திடீர் வெடிப்புச் சம்பவம்: அறுவர் வைத்தியசாலையில்இன்று (03) காலை இடம்பெற்ற இவ் வெடிப்பு சம்பவத்தின் போது காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடற்படை ஆயுத பயிற்சியின் போதே இவ் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக