ஞாயிறு, 3 மார்ச், 2013

பொதுநலவாய நாடுகள் அமைப்பு உறுப்புரிமையிலிருந்து இலங்கை இடைநிறுத்தப்பட வேண்டும் - ஜிப்ரி ரொபர்டசன்

பொதுநலவாய நாடுகள் அமைப்பு உறுப்புரிமையிலிருந்து இலங்கை இடைநிறுத்தப்பட வேண்டும் - ஜிப்ரி ரொபர்டசன்பொதுநலவாய நாடுகள் அமைப்பு உறுப்புரிமையிலிருந்து இலங்கை இடைநிறுத்தப்பட வேண்டுமென பிரித்தானியா சட்டத்தரணிகள் பேரவை உறுப்பினர் ஜிப்ரி ரொபர்ட்சன் கோரியுள்ளார்.பொதுநலவாய நாடுகள் அமர்வுகளில் பிரித்தானிய மஹாராணி கலந்து கொள்ளக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.பிரதம நீதியரசருக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தி நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கிய காரணத்தினால் இவ்வாறு பிரதம நீதியரசருக்கு எதிராக நம்பிக்கையி;;ல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை நிலைநாட்ட முயற்சித்த பிரதம நீதியரசரை பணி நீக்க எடுத்த முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக