வெள்ளி, 8 மார்ச், 2013

இசைப்பிரியா புலிகள் இயக்கத்தை சார்ந்தவர் என்றாலும் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றம்! - ரணில்

News Serviceவிடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்தவர் என்றாலும் இசைப்பிரியா என்ற பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும். யுத்த காலப்பகுதியில் வடக்கில் பெண்களுக்கு எதிராக மிக மோசமான வன்கொடுமைகள் இடம்பெற்றுள்ளன என்று எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கடந்த யுத்தக் காலப்பகுதியில் வடக்கில் பெண்களுக்கு எதிராக கடும் மோசமான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு நாட்டில் தொடர்ந்தும் ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் போது மனித உரிமைகள் தொடர்பிலான ஐ.நா. சாசனங்கள் இலங்கையில் பாதுகாக்கப்படுவதாக எவ்வாறு கருதமுடியும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக