புதன், 13 மார்ச், 2013

ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சியின் ஆளுநராக மட்டுமே வர முடியும் - சம்பிக்க

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிளிநொச்சியின் ஆளுநராக வர முடியுமே தவிர ஒருபோதும் நாட்டின் தலைவராக வர முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சியின் ஆளுநராக மட்டுமே வர முடியும் - சம்பிக்கஜாதிக ஹெல உறுமய காரணமாகவே, ஐக்கிய தேசியக்கட்சிக்கு 6 லட்சம் வாக்குகள் இல்லாமல் போனது எனவும் அமைச்சர் ரணவக்க குறிப்பிட்டுள்ளார். அந்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க, பௌத்த விரோத சக்திகளை தோளில் சுமந்து சென்று, நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதால், அவரது கட்சிக்கு சிங்கள பௌத்தர்களின் வாக்குகள் மேலும் குறைவடையும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக