இலங்கை தமிழர்களுக்கு துரோகமிழைத்த கருணாநிதி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார் தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன். இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி புதுக்கோட்டையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டதை மேற்கொண்டுள்ள அரசு மன்னர் கல்லூரி மாணவர்களை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: புதுகை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் தங்களது சொந்தக் காரணங்களுக்காக இந்த உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொள்ளவில்லை. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையைக் கண்டித்துக்கும் அங்கு எஞ்சியுள்ள தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற இன உணர்வோடு, கடமை உணர்வோடு போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களைப் போல தமிழகம் முழுதும் மாணவர்கள் போராட்டங்களின் ஈடுபட்டுள்ளனர். இவர்களை எந்த அரசியல் கட்சியும் தூண்டிவிடவில்லை. தன்னெழுச்சியான போராட்டமாகும். மற்ற எல்லா இடங்களிலும் காவல்துறையினர் அனுமதி அளித்துள்ள நிலையில், இங்கு நடைபெறும் போராட்டத்துக்கு தற்காலிக பந்தல் அமைக்க காவல்துறை அனுமதி மறுத்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த அறவழிப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டிய கடமை மாணவர்களுக்கு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக