சனி, 9 மார்ச், 2013

முலாயம் சிங் தலமையில் இந்திய குழு ஜெனீவாவிற்கு

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ளஇலங்கைக்கு எதிரான பிரேரணையின் விவாதத்தில் கலந்து கொள்வதற்கான இந்தியக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
.
இந்திய சமாஸ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் தலைமையில் இக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
.
இலங்கை மீதான இந்தப் பிரேரணை குறித்த வாக்கெடுப்பில், முலாயம் சிங் யாதவ் சிறந்த தீர்மானத்தை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை இந்திய மத்திய அரசாங்கத்துக்கு இருப்பதாக குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.
.
இந்தப் பிரரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் எனத் தமிழக கட்சிகளும், இந்திய எதிர்கட்சிகளும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள குர்ஷித்,
.
மத்திய அரசு தமிழர்களையோ, அல்லது இலங்கை அரசாங்கத்தையோ நேரடியாக பகைத்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக